ADDED : ஏப் 21, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கோடை மழை காரணமாக, வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை பழம் விலை குறைந்தது.
கடந்த
மார்ச் மற்றும் நடப்பு மாத துவக்கத்தில் கோடைக்காலம் என்பதால்,
உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழம் ஒரு கிலோ, 140
ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் நடப்பு மாதம், கடந்த சில நாட்களாக
மாநிலம் முழுவதும் சில இடங்களில் கோடை மழை பெய்ய துவங்கியது. இதனால்,
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை பழம் உற்பத்தி
அதிகரித்தது.
இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜர் தினசரி
மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து
அதிகரித்தது. இதனால் நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம், 100 ரூபாய்
முதல், 124 ரூபாய் வரை விற்றது.

