/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'வாங்க கற்று கொள்வோம்' விழிப்புணர்வு முகாம்
/
'வாங்க கற்று கொள்வோம்' விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 15, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை பெரியபாலத்தல் தொடங்கப்பட்ட, புதிய தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை இயக்குனரின் உத்தரவின்படி, 'வாங்க கற்று கொள்வோம்' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
அதில், பொது மக்களுக்கு தீ பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தீயணைப்பான்களை எப்படி கையாளுவது என்ற பயிற்சி வழங்கப்பட்டது.நிலைய அலுவலர் முசிறி (பொ) கர்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொது மக்கள் கலந்து கொண்டனர்.