'வெல்வோம் 200, படைப்போம் வரலாறு' தி.மு.க., வேட்பாளர் சந்திரன் ஓட்டு சேகரிப்பு
'வெல்வோம் 200, படைப்போம் வரலாறு' தி.மு.க., வேட்பாளர் சந்திரன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 12, 2026 05:14 AM
குளித்தலை, குளித்தலை சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சந்திரன் மணத்தட்டை, வைகைநல்லுார், சத்தியமங்கலம் ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரன் மணத்தட்டை ஊராட்சி, எழுநுாற்றுமங்கலம் கிராமத்தில், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் விஜயகுமார் தலைமையில், கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்களுடன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன், மலர்கள் துாவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேட்பாளர் சந்திரன் பேசியதாவது:
கடந்த, 15 ஆண்டுகளாக இலவச மின் இணைப்பு பெற, தமிழக முழுவதும் பல விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருந்த நிலையில்தான், 2021 சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதியை முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், ஒன்றரை ஆண்டு காலத்திற்குள், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளான மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தாயுமானவர் திட்டம், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டம் என, தான் அளித்த வாக்குறுதிகளை மட்டும் இல்லாமல் கூறாத சில வாக்குறுதிகளையும் செயல்
படுத்தி உள்ளார்.
ரூ.8,000 பரிசு கூப்பன்
வரும் சட்டசபை தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், குடும்ப அட்டைதாரர்களுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன், மகளிருக்கான உரிமை தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். விவசாயிகளுக்கு மின் மீட்டர் இல்லாத, இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கி தரவும் பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது.
வரும் தேர்தலில், 'வெல்வோம் 200, படைப்போம் வரலாறு' இதில் நம் தொகுதியும் இடம்பெற வேண்டும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற வேண்டும். அதற்கு எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உயர்கல்வி முடித்த, 5 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில், 1,500 ரூபாய் மாத உதவித்தொகையுடன், 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
வாக்கு சேகரிப்பில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் விஜயகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ஜெகநாதன், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் வதியம் பிரவீன். மாவட்ட பிரதிநிதி பெரியசாமி. வர்த்தக அணி அமைப்பாளர் தாளியாம்பட்டி ரமேஷ்.
மற்றும் மக்கள் விடுதலைக் கட்சி, தமிழர் தேசம் கட்சி, எஸ்.டி.பி.ஐ., - திராவிட தமிழர் கட்சி, ம.தி.மு.க., புதிய திராவிட கழகம், சி.பி.ஐ,, - சி.பி.எம்., - தே.மு.தி.க,, - காங்கிரஸ். வி.சி.க., தமிழக புலிகள், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து
கொண்டனர்.
சென்ற இடங்களில் எல்லாம், வேட்பாளர் சந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
