/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நுாலக உறுப்பினர் சேர்க்கை விழா
/
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நுாலக உறுப்பினர் சேர்க்கை விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நுாலக உறுப்பினர் சேர்க்கை விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நுாலக உறுப்பினர் சேர்க்கை விழா
ADDED : டிச 11, 2024 01:32 AM
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்
நுாலக உறுப்பினர் சேர்க்கை விழா
அரவக்குறிச்சி, டிச. 11-
அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, கிளை நுாலகத்தில் உறுப்பினராக சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் பாண்டிதுரை, ' போட்டித்தேர்வில் வெற்றி பெற, நுாலகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது' என்பதை விளக்கி கூறினார். வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், 'ஒரு நுாலகம் திறக்கப்பட்டால், 100 சிறைச்சாலை மூடப்படுவதாக' கூறி நுாலகம் செல்வதன் அவசியங்களை எடுத்துரைத்தார். தலைமையாசிரியர் சாகுல் அமீது, 'முன்னாள் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுவதற்கு காரணம், ஆறாம் வகுப்பில் இருந்து செய்தித்தாள்களை படித்தது தான் என்றும், நுாலகங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம்' குறித்தும் விளக்கினார். கிளை நுாலகர் இளையசபரி, 'நுாலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்கள் பற்றியும், நுாலக வளர்ச்சிக்கு புரவலராக, 1,000 ரூபாயும், பெரும்புரவலருக்கு, 5,000 ரூபாய், கொடையாளருக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து நுாலக வளர்ச்சிக்கு உதவலாம்' என்பதை எடுத்துரைத்தார். இதையடுத்து விழாவில், 161 மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நுாலக உறுப்பினர் அட்டைக்கான, 3,220 ரூபாய் கட்டண தொகையை வழங்கிய, திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரி இளநிலை உதவியாளர் ரூபன்ராஜிக்கு நன்றி கூறப்பட்டது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது கிளை நுாலகத்தில் புரவலராக இணைந்தார். பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு நன்றி கூறினார்.
சகாய வில்சன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். ராபியா பஸ்ரி, ரொகையாபீவி, கவிதா, புவனேஸ்வரி ஜோதிமணி, உஷாராணி, தஸ்லிம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

