/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டுமான பணி முடிந்து கரூரில் விரைவில் நுாலகம் திறப்பு
/
கட்டுமான பணி முடிந்து கரூரில் விரைவில் நுாலகம் திறப்பு
கட்டுமான பணி முடிந்து கரூரில் விரைவில் நுாலகம் திறப்பு
கட்டுமான பணி முடிந்து கரூரில் விரைவில் நுாலகம் திறப்பு
ADDED : பிப் 06, 2026 04:38 AM

கரூர்: ''கரூர், திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நுாலக கட்டு-மான பணி முடிந்து, 15 நாட்களில் திறக்கப்படும்,'' என, முன்னாள் அமைச்சர்
செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர்
வெண்ணைமலையில், விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர்
தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான
செந்தில்பா-லாஜி,
286 மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கினார்.
தொடர்ந்து, மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதா-னத்தில், 6.90 கோடி
ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், மாவட்ட மைய நுாலக பணிகளை ஆய்வு
மேற்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம், செந்தில்
பாலாஜி கூறியதாவது:
இந்த
நுாலகம், 17,100 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரு-கிறது. இறுதிக்கட்ட
பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்-றன. தரை தளத்தில் செய்தித்தாள்கள்
அறை, குழந்தைகள் மையம், இணையதள பிரிவு, முதியவர்கள் படிக்கும் அறை,
பெண்கள், ஆண்கள் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் கழிப்-பறை,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, லிப்ட் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம்,
முதல் தளத்தில் புத்தகங்கள் அறை, நுாலகர் அறை, இரண்டாம் தளத்தில், 500 பேர்
அமரக்கூடிய கூட்டரங்கு, மாதிரி தேர்வு அறை என மொத்தம், 1,586 ச.மீ.,
பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
இன்னும், 15 தினங்களில் கட்டுமான பணிகள் முடிந்து, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழச்சியில்,
டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்
வீரபத்திரன், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி
கமிஷனர் சுதா, உள்பட பலர் பங்கேற்றனர்.

