/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்விரோத கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
/
முன்விரோத கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 16, 2024 12:47 PM
கரூர்: முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகில் கருப்பத்துாரை சேர்ந்தவர் கோபால், 52. இவர் கடந்த, 2021 அக்., 6ல், அவரது தோட்டத்தில் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து, 11 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சண்முகசுந்தரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் கோபால் கொலை செய்யப்பட்ட வழக்கில், கரூர் மாவட்டம் கருப்பத்துாரை சேர்ந்த ராஜா, 35, வயலுார் சரவணன், 25, புதுச்சேரி சுந்தர், 35, ரவிவர்மன், 25, ஆகிய நான்கு பேருக்கு தலா ஆயுள் தண்டனை, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், கரூர் மாவட்ட கம்மநல்லுார் சுரேஷ், 38, திருக்காம்புலியூர் நந்தகுமார், 36, ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய்- அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.