/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
ADDED : ஜன 21, 2025 06:48 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை பல பகுதிகளில் மழை பெய்தது.தஞ்சாவூர் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் கடந்த, 18 முதல், நேற்று முன்தினம் வரை, மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விட்டு விட்டு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக, நேற்று அதிகாலை வரை கரூர் மாவட்-டத்தில், பல பகுதிகளில் மழை பெய்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த
மழையளவு விபரம்: (மி.மீ.,) கரூர், 13.60, அர-வக்குறிச்சி, 11.40, அணைப்பாளையம், 4.20, க.பரமத்தி, 9.00, குளித்தலை, 5.20, கிருஷ்ணராயபுரம், 9.50, மாயனுார், 13, பஞ்சப்-பட்டி, 2.80, பாலவிடுதி, 4, மயிலம்பட்டி, 6, மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் சராசரியாக, 6.56 மி.மீ., மழை பதிவானது.

