/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
ADDED : செப் 11, 2025 01:22 AM
கரூர் கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது.தெற்கு ஓடிசா-வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் பெய்ய தொடங்கி மழை நேற்று அதிகாலை வரை விடிய விடிய பெய்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை அளவு: கரூர், 29.20 மி.மீ., அரவக்குறிச்சி, 5.20, அணைப்பாளையம், 12, க.பரமத்தி, 27, கிருஷ்ணராயபுரம், 20, மாயனுார், 15, கடவூர், 4 மி.மீ., பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 9.20 மழை
பதிவானது.