தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை


ADDED : ஜன 26, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை, பல பகுதிகளில் மழை பெய்தது.தஞ்சாவூர் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் கடந்த, 22 முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறி-வித்திருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விட்டு விட்டு குளிர்ந்த காற்-றுடன் மழை பெய்தது. பிறகு, வானம் மேகமூட்ட-மாக காணப்பட்டது. மேலும், அவ்வப்போது கரூர் நகர பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6,819 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 6,399 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்-காலில், 420 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.75 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், 63 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us