ADDED : மே 19, 2026 01:41 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மயிலம்பட்டியில், 30.50 மி.மீ., மழை கொட்டியது.
தமிழகம் முழுவதும், கோடை வெயில் ஒருபக்கம் தீவிரம் காட்டும் நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, ஏழு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: கரூர், 20.60 மி.மீ., அரவக்குறிச்சி, 12.40, அணைப்பாளையம், 12.20, க.பரமத்தி, 14.60, குளித்தலை, 2.40, தோகைமலை, 4.60, கிருஷ்ண ராயபுரம், 5, மாயனுார், 5, பஞ்சப்பட்டி, 21, கடவூர், 20.50, பாலவிடுதி, 17, மயிலம்பட்டி, 30.50 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 13.82 மி.மீ., மழை பதிவானது.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்துள்ளதால், மரவள்ளிக்கிழங்கு, சோளம், எள் பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
