/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.5.7 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில் பறிமுதல்
/
ரூ.5.7 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில் பறிமுதல்
ADDED : ஏப் 19, 2024 06:41 AM
ராசிபுரம் : தேர்தல் அறிவித்த பிறகு ஒரு மாதத்தில், 5.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியவை மூலம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்க எடுத்துச் செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். இதேபோல் போலீசாரும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் போலீசார் நடத்திய சோதனையில், 5.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் கடந்த, 16 முதல், நேற்று முன்தினம் வரை, 39,713 ரூபாய் மதிப்புள்ள, 129.9 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்தில், 69,596 ரூபாய் மதிப்புள்ள, 150.26 லிட்டர், நாமக்கல்லில், 48,517 மதிப்புள்ள, 120.96 லிட்டர், பரமத்தி வேலுாரில், 60,416 மதிப்புள்ள, 375.21 லிட்டர், திருச்செங்கோட்டில், 2,89,241 மதிப்புள்ள, 5,999.88 லிட்டர், குமாரபாளையத்தில், 63,565 மதிப்புள்ள, 231.37 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும், ஐந்து லட்சத்து, 71,049 மதிப்புள்ள, 7,008 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், திருச்செங்கோடு தொகுதியில் அதிகபட்சமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

