/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நுாலகத்துறை சார்பில் இலக்கிய திருவிழா
/
நுாலகத்துறை சார்பில் இலக்கிய திருவிழா
ADDED : நவ 17, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட பொது நுாலகத்துறை சார்பில், பண்டுதகாரன் புதுாரில் உள்ள தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் இளைஞர் இலக்கிய திருவிழா நடந்தது.
அதில், இரண்டு நிமிட பேச்சு போட்டி, நுால் அறிமுக போட்டி, ஓவிய போட்டி, வினா-டி-வினா போட்டி, உடனடி ஹைக்கூ கவிதை எழுதும் போட்டி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும், முதல் மூன்று மாணவியருக்கு ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கல்லுாரி முதல்வர் நடேசன், மாவட்ட மைய நுாலக நுாலகர்கள் மேரி ரோசரி சாந்தி, சுகன்யா மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.

