/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லயன்ஸ் கிளப் சார்பில் இலக்கிய மன்ற விழா
/
லயன்ஸ் கிளப் சார்பில் இலக்கிய மன்ற விழா
ADDED : ஜூலை 04, 2024 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் லயன்ஸ் கிளப் சார்பில், மார்னிங் ஸ்டார் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளி இணைச்செயலாளர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.
அதில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து, நாட்டின் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும், மாணவர்கள் தீய பழக்க வழக்கங்-களில் ஈடுபடக் கூடாது என, பேசினார்.
விழாவில், தலைமையாசிரியை சித்ரா, ஆசிரி-யர்கள் பொன்னுசாமி, பாஸ்கர் உள்பட பலர் பங்-கேற்றனர். முன்னதாக, இலக்கியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த, மாணவ, மாணவி களுக்கு திருக்குறள் புத்தகம், பேனா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.