/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்நடைகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடக்கம்
/
கால்நடைகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடக்கம்
ADDED : அக் 25, 2024 01:08 AM
கால்நடைகள் கணக்கெடுப்பு
பணி இன்று முதல் தொடக்கம்
கரூர், அக். 25-
கரூர் மாவட்டத்தில், கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை சார்பில், 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணியை நாடு முழுவதும் இன்று முதல், ( 25ம் தேதி) முதல் மேற்கொள்ள இருக்கிறது.
மாவட்டத்தில், 3,78,121 குடியிருப்புகளில், 118 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 24 கால்நடை மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். கால்நடைகளை வளர்ப்போர் மற்றும் விவசாய பணியினை மேற்கொள்வோர், தங்கள் குடியிருப்புகளுக்கு நேரில் வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு துல்லியமான விபரங்களை அளித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

