/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காற்றாலை மின்கம்ப குழிகளால் விபத்தில் சிக்கும் கால்நடைகள்
/
காற்றாலை மின்கம்ப குழிகளால் விபத்தில் சிக்கும் கால்நடைகள்
காற்றாலை மின்கம்ப குழிகளால் விபத்தில் சிக்கும் கால்நடைகள்
காற்றாலை மின்கம்ப குழிகளால் விபத்தில் சிக்கும் கால்நடைகள்
ADDED : நவ 29, 2024 01:21 AM
க.பரமத்தி, நவ. 29-
க.பரமத்தி அருகே, காற்றாலை மின்சாரம் கொண்டு செல்ல ஏதுவாக, மின்கம்பம் நடுவதற்கு தோண்டப்பட்ட குழிகளால், கால்நடைகள் விபத்தில் சிக்குகின்றன என,
விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில், தனியார் நிறுவனத்தால் காற்றாலை அமைக்கும் பணி நடக்கிறது. காற்றாலையில் இருந்து, மின்சாரம் கொண்டு செல்ல ஏதுவாக சாலையோரம் மற்றும் நிலங்களில் மின்கம்பம் நடுவதற்காக, 10 அடி ஆழத்தில் கம்பம் நடுவதற்கு குழி தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் குழிகள் அனைத்திலும் கம்பம் நடுவது கிடையாது. அவ்வாறு, விட்டுப்போன குழிகளை முறையாக மூடுவதும் இல்லை.
இதனால் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் கால்நடைகள், குழிகளில் மாட்டி கொள்கிறது. அந்த வழியாக செல்லும் குழந்தைகளும் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம், குஞ்சாம்பட்டியில் கம்பம் நடுவதற்காக தோண்டப்பட்ட ஆழ்துளை குழியில் விழுந்து ஆடு ஒன்று இறந்துள்ளது. எனவே, இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில் குழிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.