/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுபான்மையினருக்கு கடன் உதவி முகாம்: கலெக்டர்
/
சிறுபான்மையினருக்கு கடன் உதவி முகாம்: கலெக்டர்
ADDED : நவ 15, 2024 02:12 AM
கரூர், நவ. 15-
'சிறுபான்மையினருக்கான கடன் உதவி வழங்கும் சிறப்பு முகாம், நவ., 20 முதல்
நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான சிறப்பு முகாம், அரவக்குறிச்சி தாலுகாவில், ஆண்டிப்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கியில், வரும், 20, சின்னதாராபுரம் வேளாண் கூட்டுறவு வங்கியில், வரும், 27ல்
நடக்கிறது.
இதேபோல், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், சிந்தலவாடி வேளாண்மை கூட்டுறவு வங்கியில், வரும், 27, கடவூர் தாலுகாவில், கீழவெளியூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில், டிச., 11, சுண்டுகுழிப்பட்டி வேளாண்மை கூட்டுறவு வங்கியில், டிச., 18, குளித்தலை தாலுகாவில், குளித்தலை கூட்டுறவு நகர வங்கியில் டிச., 21 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினர் (கிறிஸ்தவர், இஸ்லாமியயர், சீக்கியர், புத்தம், பார்சி, ஜெயின்) ஆகியோர் முகாமில், கடன் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.