/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கைவினை திட்ட பயனாளிகளுக்கு ரூ.28.60 லட்சம் கடன் வழங்கல்
/
கைவினை திட்ட பயனாளிகளுக்கு ரூ.28.60 லட்சம் கடன் வழங்கல்
கைவினை திட்ட பயனாளிகளுக்கு ரூ.28.60 லட்சம் கடன் வழங்கல்
கைவினை திட்ட பயனாளிகளுக்கு ரூ.28.60 லட்சம் கடன் வழங்கல்
ADDED : ஏப் 20, 2025 01:48 AM
கரூர்:
கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலைஞர் கைவினை திட்ட பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். பின்னர், அவர் கூறியதாவது:
இத்திட்டத்தின் மூலம் கட்டிட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சடித்தல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன்வலை தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மூங்கில்,பிரம்பு, சணல் பனை ஓலை வேலைப்பாடுகள், நகை செய்தல், சிகையலங்காரம், அழகு கலை, துணி நெய்தல் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பில், 25 சதவீதம் மானியம் மற்றும், 5 சதவீதம் வரை வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்குவதற்கு தேவையான திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. தற்போது, 21 பயனாளிகளுக்கு, 28.60 லட்சம் ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்
.நிகழ்ச்சியில் கரூர் எம்.பி., ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அன்பொளி காளியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.