/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெறலாம்'
/
'வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெறலாம்'
'வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெறலாம்'
'வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெறலாம்'
ADDED : ஆக 10, 2025 01:04 AM
கரூர் :வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு, 3 சதவீதம் வட்டி மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும் வங்கிக் கடனுடன் கூடிய மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கு நடப்பு நிதி ஆண்டில், 78 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக, 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
நிறுவனம் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக, 25 திட்டங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவை, சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்பு, தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் இயந்திரங்கள் உள்பட பல்வேறு கட்டமைப்புகளுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு ddab.karur1@gmail.com என்ற இ-மெயில் அல்லது வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), கரூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

