/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2025 01:17 AM
கரூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்களில், 10 ஆண்டுகள் புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் பணியிடங்களை தனியாருக்கு விடுவதை ரத்து செய்ய வேண்டும், குறைந்தப்பட்ச ஊதிய அரசாணைபடி உரிய ஊதியம் வழங்க வேண்டும், கரூர் மாநகராட்சி சுக்காலியூரில் கட்டப்பட்டுள்ள வீடுகளை, துாய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் ராஜா முகமது, சுப்பிரமணியன், ஜீவானந்தம், சாந்தி, கந்தசாமி, கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

