/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு
/
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு
ADDED : ஆக 11, 2025 05:49 AM
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில், 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்-ளது. இருப்பினும், தடையை மீறி, க.பரமத்தி கடைவீதிகளில் எல்லா பகுதியிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்-படுகிறது. குறிப்பாக, டீக்கடைகள், டாஸ்மாக் பார்கள் அதிகஅளவில் பிளாஸ்டிக் கப் பயன்பாடு இருந்து வருகிறது. மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்கள் வீதிகளிலும், சாக்கடை கால்வாய்களிலும், நீர் ஆதாரங்களிலும் வீசப்படு-வதால், சுகாதாரமற்ற நிலையும், நீர், நிலம் மாசு-படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் ஏற்படும் தீமைகள் குறித்து உள்-ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு பேரணி மட்டுமே நடத்துகின்றனர். விதிமுறை-களை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மீது எந்த
விதமான நடவடிக்கை எடுப்பது
கிடையாது.
எனவே உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து, பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்வதோடு, பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்பு-ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்-வலர்களில் கோரிக்கையாக உள்ளது.

