தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 24, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இண்டூர், விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை பறக்கும் படை உதவி இயக்குனர் முத்து, தர்மபுரி மாவட்ட உதவி புவியியலாளர் மஞ்சுநாத் ஆகியோர், கனிம வளம் கடத்தப்படுவது தொடர்பாக, கடந்த, 22 அன்று நள்ளிரவு, 1:20 மணிக்கு தர்மபுரி ஒகேனக்கல் சாலையில், பி.எஸ்., அக்ரஹாரம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த அசோக் லேலண்ட் டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 3 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவர் தப்பிச்சென்ற நிலையில், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, இண்டூர் போலீசில் புகார் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us