தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : செப் 20, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார், ப.வேலுார் தேசிய நெடுஞ்சாலையில், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மணல் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், காவிரி ஆற்று மணல் இருந்தது. ஆனால், மணலுக்கு உரிய ஆவணம் இல்லை. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவிரி ஆற்றில் மணலை சட்ட விரோதமாக திருடி விற்பனைக்கு, நாமக்கலுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் லாரி டிரைவர் கேரளா மாநிலம் பாலக்காடு அருகே சித்துாரை சேர்ந்த மதுவை கைது செய்து, மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மணல் லாரி உரிமையாளரை, ப.வேலுார் போலீசார் தேடி வருகின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us