தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 09, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி வி.ஏ.ஓ., கிருபா மற்றும் வருவாய் துறையினர் நேற்றுமுன்தினம் மதியம் 2:30 மணியளவில் பஞ்சப்பட்டி ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தரகம்பட்டி-குளித்தலை நெடுஞ்சாலையில் வேகமாக வந்த மகேந்திரன், 46, என்பவருக்கு சொந்தமான அசோக் லேலண்ட் லாரி வந்தது.

அதை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல் காலாவதியான அனுமதிச்சீட்டு வைத்து, மூன்று யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.வி.ஏ.ஓ., கிருபா கொடுத்த புகார்படி, லாரி டிரைவர் ரத்தினத்தான்பட்டி மகேந்திரன், 46, மீது வழக்கு பதிவு செய்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us