தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இரு சக்கர வாகன விபத்தில் லாரி டிரைவர் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் லாரி டிரைவர் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் லாரி டிரைவர் உயிரிழப்பு


ADDED : ஜூலை 09, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில், லாரி டிரைவர் உயிரிழந்தார்.

அரவக்குறிச்சி அருகே ராஜபுரம் ஆதி திராவிடர் மேற்கு தெருவை சேர்ந்தவர் வேலுசாமி மகன் ராஜா, 47. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில் அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us