ADDED : நவ 11, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோபால், 62. இவர், பெரியபாலம் கடைவீதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தார்.
தகவலறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார், லாட்டரி சீட்டு விற்ற கோபாலை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.