/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விழாவுக்கு ஒலி பெருக்கி தடை; தாலுகா அலுவலகம் முற்றுகை
/
விழாவுக்கு ஒலி பெருக்கி தடை; தாலுகா அலுவலகம் முற்றுகை
விழாவுக்கு ஒலி பெருக்கி தடை; தாலுகா அலுவலகம் முற்றுகை
விழாவுக்கு ஒலி பெருக்கி தடை; தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 13, 2024 06:48 AM
குளித்தலை: குளித்தலை, மாரியம்மன் கோவிலில் வரும், 15ல் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட ஒலிபெருக்கியை, பயன்படுத்த தடை செய்து, ஒலி பெருக்கி உரிமையாளர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, குளித்தலை சுற்று பகுதி மக்கள் சார்பில், தாசில்தார் அலுவலகம் வரவேண்டும் என, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, ஒலி பெருக்கி வைக்க அனுமதி வழங்க வேண்டும். அதற்காக பொது மக்கள், இந்து அமைப்பினர் ஆகியோர் தாசில்தார் அலுவலகத்திற்கு ஒன்று சேர்ந்து முற்றுகையிட முயற்சித்தனர். இன்ஸ்பெக்டர் உதயகுமார், தாசில்தார் மகாமுனி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை போல் சிறப்பாக நடைபெற உள்ள, மாரியம்மன் கோவில் விழாவிற்கு ஒலிபெருக்கி வைக்க அனுமதி வேண்டும். ஒலிபெருக்கி உரிமையாளர் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஒலி பெருக்கி குறைந்த சப்தத்துடன் இயக்க வேண்டும். வழக்கு குறித்து மேல் அதிகாரி அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில், பொது மக்கள், இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர். 50க்கும் மேற்பட்ட மக்கள் எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரியிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற, அனைவரும் அமைதியான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.

