/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறைந்த மின் அழுத்தம்; பொதுமக்கள் தவிப்பு
/
குறைந்த மின் அழுத்தம்; பொதுமக்கள் தவிப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:50 AM
கரூர்: குறைந்த மின் அழுத்தத்தால், மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்-பட்டு, பொதுமக்கள் தவிக்கின்றனர்.கரூர், தான்தோன்றிமலை துணை மின் நிலையத்திலிருந்து தாந்-தோணி, காந்தி கிராமம், கலெக்டர் அலுவலக சுற்று வட்டார பகு-திகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இங்கு, அடிக்கடி மின்சாரம் தடைபட்டு மீண்டும் வருகிறது. இந்த இரு துணைமின்நிலைய பகுதிகளிலும் அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. ஸ்டெப்லைசர் வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் மூலம் மின்சாரம் ஏற்றத்தாழ்வுடன் வருவதை பார்த்து புகார் செய்துள்ளனர். குறைந்த அழுத்த மின்சாரம் பிரச்னை வரும்போது, யு.பி.எஸ்., வசதி இல்லாத மின்நுகர்வோர் தங்கள் கணினி, லேப்டாப், குளிர்சாதனபெட்டி, டியூப்லைட்டுகள் போன்-றவை பழுதாகி வருவதாக தெரிவித்தனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் குறைந்த அழுத்த மின்சார பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.