/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மா.திறனாளி கணக்கெடுப்பு கரூர் கலெக்டர் தகவல்
/
மா.திறனாளி கணக்கெடுப்பு கரூர் கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 14, 2025 03:50 AM
கரூர்: கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்-றன.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உரு-வாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கும் பணி நடக்கிறது. கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் முன்கள பணியா-ளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை, செப்., மாத இறு-திக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.