ADDED : ஜூலை 31, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநகர செயலாளர் தண்டபாணி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம்நடந்தது.
அதில், மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேஷனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்தும், கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, நிர்வாகிகள் ேஹாசுமின், சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, ராஜா முகமது, சக்திவேல் உள்பட, பலர் பங்கேற்றனர்.