/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு வெண்ணைமலை கோவிலுக்குரிய இடம் ஆய்வு
/
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு வெண்ணைமலை கோவிலுக்குரிய இடம் ஆய்வு
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு வெண்ணைமலை கோவிலுக்குரிய இடம் ஆய்வு
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு வெண்ணைமலை கோவிலுக்குரிய இடம் ஆய்வு
ADDED : நவ 14, 2025 02:18 AM
கரூர்உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி, கரூர் வெண்ணைமலை கோவிலுக்குரிய இடங்களுக்கான பட்டியல் தயாரித்து, அதனை சரிபார்க்கும் பணியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்
ஈடுபட்டனர்.
கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த இடங்களை மீட்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, அந்த இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது. கோவில் இடங்களை பயன்படுத்தி வருபவர்கள் குத்தகைதாரராக மாற வேண்டும் அல்லது கையகப்படுத்தப்படும் என, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இடங்களை மீட்காமல் இருந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன், கோவில் நிலங்களை மீட்க முயற்சி
செய்யாத அதி-காரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மனுதாக்கல் செய்தார். அதில், கோவிலுக்கு சொந்தமான இடத்தை வைத்திருக்கும், அனைத்து நபர்களின் பட்டியலை இன்று (14ம் தேதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, எவ்வித தவறுக்கும், புகாருக்கும் இடமளிக்காமல் மிக துல்லியமாக வருவாய்த்துறை, மின்சார வாரியம் ஆகியோரது உதவியுடன், படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு, திருப்பூர் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் ஆணையிட்டார்.
இதையடுத்து, ஹிந்துசமய அறநிலையத்துறை திருப்பூர் துணை ஆணையர் ஹர்ஷினி, கரூர் உதவி ஆணையர் ரமணிகாந்தன், திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள், பணியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான காதப்பறை, ஆத்துார் பூலம்பாளையம் பஞ்சாயத்துக்குப்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, கடை, காலி இடங்கள் ஆகியவற்றின் பட்டியலை தயாரித்து உள்ளனர். வெண்ணைமலை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

