/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மஹா சோளியம்மன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
/
மஹா சோளியம்மன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
ADDED : மே 08, 2025 01:24 AM
கரூர், மே 8
கரூர் அருகேயுள்ள, ஆத்துார் மஹா சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், மார்ச் மாதம் நடந்தது.
தொடர்ந்து, முதலாமண்டு தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு தொடங்கியது. இதில் அம்மனுக்கு சந்தனம், தேன், மஞ்சள், பால், தயிர் போன்ற திரவியங்களில் அபிஷேகம் நடந்தது.
கோவிலில் இருந்து புறப்பாடாகி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். தீபாராதனை காட்டப்பட்ட பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், ஆத்துார், ஆண்டாங்கோவில், காதப்பறை, இனாம் கரூர், மின்னாம்பள்ளி, கரூர் ஆகிய பகுதிகளில் சென்று விட்டு, 10ல் மீண்டும் கோவிலில் அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.