/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகாலட்சுமி ராமசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி
/
மகாலட்சுமி ராமசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி
ADDED : அக் 15, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம், மகாலட்சுமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி கோவில் உள்ளது. நேற்று மகாலட்சுமி சமேத ராமசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மகாலட்சுமி, ராமசுவாமிகளுக்கு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் கொடி மரம் வளாகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாக ஹோமம் பூஜை செய்யப்பட்டது. பின், மகாலட்சுமி, ராமசுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

