/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சக்கர நாற்காலிகளை பராமரிக்கும் பணி
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சக்கர நாற்காலிகளை பராமரிக்கும் பணி
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சக்கர நாற்காலிகளை பராமரிக்கும் பணி
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சக்கர நாற்காலிகளை பராமரிக்கும் பணி
ADDED : ஏப் 02, 2024 04:45 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், சக்கர நாற்காலிகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டளிக்க ஏதுவாக, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில், ஓட்டுப்பதிவு மையம் தரை தளத்தில் அமைந்திருக்க வேண்டும். நுழைவாயில் வெளியேறுதல் மற்றும் ஓட்டு பெட்டி வரை தடையற்ற பாதை அமைக்கப்பட்டுள்ளதா என கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
சக்கர நாற்காலிகளில் கைப்பிடி உள்ளிட்ட பாகங்கள், உரிய முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ, பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் ஒட்டுப்பதிவு மையத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அருகில், சக்கர நாற்காலிகளை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்துக்கும் சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்படும்.