/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் 'மேக் ஏ தான்' போட்டி; வென்றவர்களுக்கு பரிசு

ADDED : மே 24, 2025 02:10 AM
கரூர், கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை சார்பில், 'மேக் ஏ தான்' 2025 என்ற தேசிய அளவிலான போட்டி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். போட்டியில், 50-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பல மாநிலங்களில் இருந்து பங்கேற்று, ஒன்னானோ டெக்னாலஜீஸ், ஜே.கே. டெக் சொல்யூஷன்ஸ் மற்றும் என்டப்பிள் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கிய பிரச்னை அறிக்கைகளுக்கு தீர்வு வழங்கினர்.
ஹார்ட்வேர், ஆன்டென்னா மற்றும் பி.சி.பி. வடிவமைப்புகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்கள் உருவாக்கிய மூன்று சிறந்த புதுமையான திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இணை செயளாலர் சரண்குமார், இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், மின்னணு மற்றும் தொடர்பியல் துறை தலைவர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.