/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண் ஓதுவாருக்கு மாமணி விருது வழங்கல்
/
பெண் ஓதுவாருக்கு மாமணி விருது வழங்கல்
ADDED : ஆக 15, 2024 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: சென்னையில் பணியாற்றி வரும், பெண் ஓதுவாருக்கு தெய்வீக தமிழிசை மாமணி விருது வழங்கப்பட்டது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தெய்வ திருமண விழா சமீபத்தில் நடந்தது. அதில், சென்னை பாலவாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில், ஓதுவராக பணியாற்றி வரும் காஞ்சனாவுக்கு, தெய்வீக தமிழிசை மாமணி விருதை, தேனி சுந்தரலிங்க சுவாமிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ், கோவில் செயல் அலுவலர் சரவணன், பரணிபார்க் கல்வி நிறுவன செயலாளர் பத்மாவதி, முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.