/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3 ஆடுகளை கொடூரமாக குத்தி கொன்றவர் கைது
/
3 ஆடுகளை கொடூரமாக குத்தி கொன்றவர் கைது
ADDED : நவ 24, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3 ஆடுகளை கொடூரமாக
குத்தி கொன்றவர் கைது
ப.வேலுார், நவ. 24--
ப.வேலுார் அருகே, குன்னமலை அத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சவுந்தர்ராஜன், 32; விவசாயி. அதே பகுதியை சேர்ந்த ராஜ் மகன் மனோஜ், 24; விவசாயி. இவர்களது குடும்பத்தினரிடையே சொத்து பிரச்னையால் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, சவுந்தரராஜன் வீட்டிற்கு வந்த மனோஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, சவுந்தரராஜன் தோட்டத்தில் இருந்த, 3 ஆடுகளை மனோஜ் சரமாரியாக கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து புகார்படி, நல்லுார் போலீசார், மனோஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.