/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவியை காதலிக்க வற்புறுத்தியவர் கைது
/
மாணவியை காதலிக்க வற்புறுத்தியவர் கைது
ADDED : செப் 16, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலையில், அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த பள்ளி மாணவியை, அந்த பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்தோஷ் குமார், 23, என்பவர், தன்னை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி, தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து, தனது தாயிடம் நடந்த சம்பவங்களை மாணவி கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் தாய் அளித்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ், சந்தோஷ் குமாரை கைது செய்து, கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.