ADDED : ஆக 01, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் ரயில்வே கேட் அருகே, புதுக்குறுக்குபாளையத்தை சேர்ந்தவர் வாசுகி, 27. இவர், கரைப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இவர் கடையில் இருந்த போது, கரைப்பாளையம் பூலாங்காலனியை சேர்ந்த பூபதி, 64, என்பவர், 5 கிலோ கோதுமை கேட்டுள்ளார்.
அதற்கு அவர் கோதுமை இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து, திருக்காடுதுறை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், அலுவலக பணிக்காக வாசுகி சென்றார். அங்கு, பூபதி குடிபோதையில் சென்று, வாசுகியை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து, பூபதியை கைது செய்தனர்.