/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டில் 8.50 பவுன் களவாடியவர் கைது
/
வீட்டில் 8.50 பவுன் களவாடியவர் கைது
ADDED : ஆக 06, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் மதனா, 55; கணவரை பிரிந்து வாழ்கிறார். நேற்று முன்தினம் காலை ஈரோடு சென்றவர் மாலையில் வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. மதனா புகாரின்படி கடத்துார் போலீசார் களவாணியை தேடி வந்தனர்.
இது தொடர்பாக ஊட்டியை சேர்ந்த பிரதாப்பை, 23, கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைளை பறிமுதல் செய்தனர்.