ADDED : ஆக 06, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:கோவை
மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சோளீஸ்வரன்பட்டி, ரெவென்யூ நகர் பகுதியை
சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் விக்னேஷ் நாகசக்தி, 36; இவர் கடந்த, 3ல்
திண்டுக்கல்லில் இருந்து கரூரில் தன், 'பொலிரோ' காரில் சென்று
கொண்டிருந்தார்.
இவரது வாகனம் மலைக்கோவிலுார் பழைய மேம்பாலத்தில்
சென்றுகொண்டிருந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து
மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த
விக்னேஷ் நாக சக்தியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பள்ளப்பட்டி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில்
இருந்த நாகசக்தி, 4ம் தேதி இரவு உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக,
அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
