ADDED : மார் 15, 2026 08:16 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டம், சின்னதாராபுரம் காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
கருப்புசாமி, 55; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம்,
டி.வி.எஸ்., மொபட்டில் சின்ன தாராபுரம்-ஆண்டிப்-புதுார் சாலையில்
சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மொபட் சறுக்கி கட்டுப்பாட்டை
இழந்ததில், கருப்புசாமி கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால்,
தலையில் படுகாயமடைந்த கருப்பு-சாமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு
கருப்புசாமி உயிரி-ழந்தார். இதுகுறித்து, கருப்புசாமியின் மனைவி
பேபி, 42, அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
