ADDED : மார் 20, 2026 07:22 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அருகே பண்ணப்பட்டி பகுதியில், வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தில்
இருந்து, தடுமாறி கீழே விழுந்-தவர் உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி
அருகே அம்மாபட்டி அடுத்த சோழதாசன்பட்டி சந்தைப்பேட்டையை
சேர்ந்தவர் அழகர், 52. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பள்ளப்பட்டியில்
இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் பண்ணப்பட்டி அருகே வந்தபோது, வாகனத்தை வேக-மாக
இயக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள்
உடனடியாக மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்-துவக் கல்லுாரி
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக,
திருச்சி அரசு மருத்துவமனையில் அனும-தித்தனர். சிகிச்சை பலனின்றி
நேறறு முன்தினம் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
