ADDED : ஆக 05, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:திருச்சி
மாவட்டம், வீரகலுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரட்ரிக் அருள் மகன்
பாக்கியசீலன், 32; ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள்.
இவரது
குடும்பத்தினர், கடந்த, 1ல், கொல்லிமலையில் உள்ள மாசி பெரியசாமி
கோவிலுக்கு கிடா வெட்டி பூஜை செய்ய சென்றனர். மறுநாள் மாலை, 4:00
மணிக்கு, 'ராயல் என்பீல்டு' வண்டியில், பாக்கியசீலன் கடைக்கு
சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், பாக்கிய சீலனுக்கு
தலையில் அடிபட்டது. அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
வாழவந்திநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
