ADDED : ஏப் 25, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, அமராவதி ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, 54. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவசெல்வி, 53. ரகுபுரம் பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றில், மது போதையில் தண்டபாணி மீன் பிடிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது நீரில் மூழ்கியதால், அருகில் இருந்தவர்கள் தண்டபாணியை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக தண்டபாணி மனைவி சிவசெல்வி அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
