தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/லாரி டிரைவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

லாரி டிரைவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

லாரி டிரைவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : நவ 23, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த குப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 28; லாரி டிரைவர்.இவர், கடந்த, 20 இரவு, 10:30 மணிக்கு, தன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன், 33, சங்கப் பிள்ளை, அண்ணாதுரை ஆகிய மூவரும், அவரிடம் தகராறில் ஈடுபட்டு, கட்டையால் தாக்கினர். சத்தம் கேட்டு வந்த சுப்பிரமணியின் அண்ணனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட லாரி டிரைவர், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் அளித்த புகார்படி, ராஜேந்திரன், சங்கப்பிள்ளை, அண்ணாதுரை மீது வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சங்கப்பிள்ளை,

அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us