/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு துணை பயிற்சி நிலையத்தில் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
/
கூட்டுறவு துணை பயிற்சி நிலையத்தில் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
கூட்டுறவு துணை பயிற்சி நிலையத்தில் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
கூட்டுறவு துணை பயிற்சி நிலையத்தில் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 31, 2025 01:50 AM
கரூர், கரூர் கூட்டுறவு துணை பயிற்சி நிலையத்தில், மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின், துணை பயிற்சி நிலையம் கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படுகிறது. அதை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பெரிய குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இளைஞர் ஈர்ப்பு முகாமில் பங்கேற்று, கூட்டுறவு செயல்பாடுகள் குறித்து பேசினார். பிறகு, பள்ளி வளாகத்தில் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் மரக்கன்றுகளை நட்டார். அப்போது, கரூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா, துணைப்பதிவாளர்கள் சுபாஷினி, திருமதி, மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் கவுரி உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.