/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED : அக் 11, 2025 12:40 AM
குளித்தலை, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவில் பழமை வாய்ந்த சிவாலயமாக உள்ளது. சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் முருகன், விஸ்வநாதர், விசாலாட்சி. வைரப்பெருமாள், கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. கடந்த செப்., 14ம் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 24 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி யாகசாலையில் பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழாவில் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.