/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வழியாக செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை நீட்டிப்பு
/
கரூர் வழியாக செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை நீட்டிப்பு
கரூர் வழியாக செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை நீட்டிப்பு
கரூர் வழியாக செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை நீட்டிப்பு
ADDED : செப் 18, 2025 02:19 AM
கரூர், கரூர் வழியாக செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், நாளை (19) முதல் மீண்டும் சென்னை எழும்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இருந்து நாள்தோறும், இரவு கரூர், திருச்சி வழியாக சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அதே போல், சென்னை எழும்பூரில் இருந்து, மங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை முதல், சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த பராமரிப்பு காரணமாக, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்தில் நிறுத்தப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும், பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையிலும், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை இயக்கப்படாமல், தாம்பரத்தில் அதிகாலை, 3:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
இதனால் கரூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் மற்ற இடங்களுக்கு செல்வதில் சிரமப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழிலும் செய்தி வெளியானது.
இந்நிலையில், வழக்கம் போல் நாளை முதல், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் எனவும், மங்களூருவில் இருந்து சென்னை தாம்பரம் வரை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை மீண்டும் இயக்கப்படும் எனவும், தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், கரூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இன்று மாற்றம்
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: ஜோலார்பேட்டையில் பராமரிப்பு பணியால், செப்., 18(இன்று) காலை, 6:00 மணிக்கு புறப்படும், ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், திருப்பத்துார் வரை மட்டும் இயக்கப்படும். அன்று மதியம், 2:45க்கு ஜோலார்பேட்டையில் கிளம்ப வேண்டிய ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில், திருப்பத்துாரில் புறப்படும். திருப்பத்துார் முதல் ஜோலார்பேட்டை இடையே
இரு மார்க்கத்திலும் ரத்து
செய்யப்படுகிறது.