தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அடிப்படை வசதி இல்லாத மண்மங்கலம் தாலுகா ஆபீஸ்

அடிப்படை வசதி இல்லாத மண்மங்கலம் தாலுகா ஆபீஸ்

அடிப்படை வசதி இல்லாத மண்மங்கலம் தாலுகா ஆபீஸ்


ADDED : ஜன 22, 2025 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில், மண்மங்கலம் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் தாலுகாவில் இருந்து, மண்மங்கலம் தாலுகா கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மண்மங்கலம் பஸ் ஸ்டாப்பில் தனியார் கட்டடத்தில், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது. பிறகு, மண்மங்கலத்தில் சொந்த கட்டடத்தில் தற்போது தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் மண்மங்கலம் தாலுகா அலுவலகம் உள்ளது.

கடந்தாண்டு, மண் சாலை தார்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில், விளக்கு வசதி, பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்டவை செய்து தரப்படவில்லை. தற்போது, தாலுகா அலுவலக நுழைவு வாயிலில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிழற்கூடம் இல்லை. வாங்கல், நன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள், மண்மங்கலம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, தாலுகா அலுவலகத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தாலுகா அலுவலகம் சொந்த கட்டடத்தில் செயல்பட துவங்கி, ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், பயணி கள் நிழற்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யாமல், கரூர் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மண்மங்கலம் தாலுகா அலுவலக நுழைவு வாயிலில், நிழற்கூடம் மற்றும் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us