/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிழற்கூடம் இல்லாத மண்மங்கலம் தாலுகா அலுவலகம்: மக்கள் அவதி
/
நிழற்கூடம் இல்லாத மண்மங்கலம் தாலுகா அலுவலகம்: மக்கள் அவதி
நிழற்கூடம் இல்லாத மண்மங்கலம் தாலுகா அலுவலகம்: மக்கள் அவதி
நிழற்கூடம் இல்லாத மண்மங்கலம் தாலுகா அலுவலகம்: மக்கள் அவதி
ADDED : ஆக 23, 2025 01:34 AM
கரூர், பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில், மண்மங்கலம் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் தாலுகாவில் இருந்து, மண்மங்கலம் தாலுகா கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மண்மங்கலம் பஸ் ஸ்டாப்பில் தனியார் கட்டடத்தில், தாலுகா அலுவலகம் செயல்பட்டது.
பிறகு, மண்மங்கலத்தில் சொந்த கட்டடத்தில் தற்போது தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தில் மண்மங்கலம் தாலுகா அலுவலகம் உள்ளது. 2023ல் மண் சாலை தார்ச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில், மின் விளக்கு வசதி, பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்டவை இல்லை.
தற்போது, தாலுகா அலுவலக நுழைவு வாயிலில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிழற்கூடம் இல்லை. வாங்கல், நன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் பொது மக்கள், மண்மங்கலம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, தாலுகா அலுவலகத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தாலுகா அலுவலகம் சொந்த கட்டடத்தில் செயல்பட துவங்கி, ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யாமல், மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மண்மங்கலம் தாலுகா அலுவலக நுழைவு வாயிலில், நிழற்கூடம் மற்றும் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.